(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ பரவியதையடுத்து முகாமில் இருந்த 1200 பிள்ளைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏதென்ஸின் மேற்கு கடற்கரையில் உள்ள நகரமான லூட்ராகியில் தீ பரவியதையடுத்து அந்த முகாம் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தலைநகரின் தென்கிழக்கில் அமைந்துள்ள Loutraki பகுதியில் மற்றுமொரு தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை உள்ளுர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவசர சேவை ஊழியர்களின் உதவியுடன் பலர் வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.