(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சீனாவுக்கான குரங்குகள் ஏற்றுமதியை சாதாரண வர்த்தக கொடுக்கல் வாங்கல் போன்று நடைமுறைப்படுத்தியிருந்தால் தற்போது வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்திருக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
துரதிஷ்டவசமாக சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பான விவாதம் ஊடகங்களுக்கு சென்றதாகவும், அது ஊடகங்களுக்கு செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்ததாகவும், இதனால் பல்வேறு விலங்கின ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் நரி மற்றும் அணில்களால் அழிக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகளால் வருடத்திற்கு சுமார் 30,000 மில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.