முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அகழ்வு பணியின் 5ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (24) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியினை ஆய்வுசெய்வதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விசேட ஸ்கான் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 26 மனித உடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் இன்று மேலும் பல மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிய முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.