NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொட்டக்கலை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து ..!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டக்கலை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (16) பிற்பகல் கொட்டக்கலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வரும் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும்,விபத்து தொடர்பான விசாரணைகளை கொட்டக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles