NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே உதவிகள் கிடைக்கின்றன – ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பகுதியில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை மாவட்ட மாநாடு நேற்று இடம்பெற்றது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

புதியதொரு அரசியல் கொள்கையுடன், புதிய கட்சி ஊடாக, தூய்மைமையான சிந்தனைகளுடன் நாம் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் கட்சி எனவும், எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாம் அனைவரும் ஒரே நாட்டில் பிறந்து, ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் எனவே, இந்த ஒற்றுமையை நாம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தமது கட்சிக்கு தற்போது தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும் போது, ஏன் எமது கட்சிக்கு எதிராக மட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்?

தான் பாராளுமன்றுக்கு வந்தால், அவர்களின் மனித உரிமை மீறப்படும் என்று தனக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles