NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோதுமையின் விலையை குறைத்தாலும் பாணின் விலையை குறைக்க முடியாது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்று (18) முதல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் விலையை திருத்த முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 10 கோதுமை மா நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் மட்டுமே இவ்வாறு கோதுமை மாவின் விலையை குறைத்துள்ளதால், அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தள்ளுபடியாக வழங்குவதால், அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 30 ரூபா அல்லது அதற்கும் குறைவாக குறைக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செரண்டிப் மற்றும் பிரிமா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இவ்வாறு கோதுமை மாவின் விலையை நேற்று முதல் 10 ரூபாவினால் குறைத்துள்ளன.

Share:

Related Articles