NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானம்!

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் கோழி இறைச்சி விலை உயர்வால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Share:

Related Articles