NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, இலங்கை கடற்படையால் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீனவர்கள், கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்

Share:

Related Articles