NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சனத் நிஷாந்தவின் இழப்பை எண்ணி கண்ணீர்விட்ட மஹிந்த!

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் என்பது மிகப்பெரிய இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

சனத் நிஷந்தவின் வீட்டிற்கு சென்ற மஹிந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவரது மரணத்திற்கு கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறேன். அவர் அனைத்து நடவடிக்கைளிலும் துணையிருந்தார். கட்சி நடவடிக்கைகள் மாகாண சபை நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திலும் முன்னின்று செயற்பட்டார்.

அவரது இழப்பு எங்கள் கட்சிக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் மிப்பெரிய இழப்பாகும். அவர் தனது மாகாணத்திற்காக மட்டும் செயற்படவில்லை. 

முழு நாட்டிற்காகவும் சேவை செய்தார். ஒரு இடத்திற்குள் மட்டுப்பட்ட சேவையை வழங்கவில்லை.

கட்சியில் ஒரு தலைமைத்துவத்தை இழப்பதென்பது இலகுவான விடயமல்ல. அவர் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்  என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles