(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சமனல வாவியின் நீர் கொள்ளளவு 14 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அதன் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, அதன் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சார சபையின் பணிப்புரைக்கு அமைய சமனல வாவி நீர்த்தேக்கத்தில் மின்சார உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சமனல வாவி நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 80 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் அமைப்புக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 5,751 ஏக்கர் அடியாக அதிகரித்துள்ளதாக உடவலவ நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.