NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சம்பிக்கவுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் இராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles