NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பாப்வே – இலங்கை போட்டி தொடரின் நுழைவு சீட்டு தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடரின் நுழைவு சீட்டுக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

www.srilankacricket என்ற இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கவுன்டர் ஜனவரி 4 முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் திறக்கப்படும்.

அதன்படி, கிராண்ட்ஸ்டாண்ட் வகை டிக்கெட் ரூ.5,000க்கு விற்கப்படுகிறது.

இந்தப் போட்டித் தொடர் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்டதாகும்.

ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் பகல் மற்றும் இரவு போட்டிகளாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

14, 16, 18 ஆகிய திகதிகளில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles