NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் தேரர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அநுராதபுரம் – மதவாச்சியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் தேரர் ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.

மதவாச்சி – வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் 59 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 07 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் நிலையில், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேரர் மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles