NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர்களிடையே பல் சார்ந்த நோய் அதிகரிப்பு..!

நாட்டில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே பல் சார்ந்த நோய் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

5 வயது சிறுவர்களில் 63 சதவீதமானோர் பல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.இது பாரிய பிரச்சினையாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் திலீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி சிறுவர்களிடையே பல் நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.எனவே சிறுவர்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் பல் துலக்குவதனை பழக்கப்படுத்த வேண்டும்.

அத்தோடு, இனிப்பு பண்டங்களைத் தவிர்ப்பதுடன், அவற்றினை பிரதான உணவு வேளைகளுக்கு மாத்திரம் வழங்குவதனை உறுதிப்படுத்துமாறும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் திலீப் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

Share:

Related Articles