NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை – 13 விசேட சலுகைகள் அறிவிப்பு!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவும் இரண்டவது இடத்தில் சீனாவும் உள்ளன.

முதல் இடத்தில் இருந்து வந்த சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, ஒரு குழந்தையை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் தொகை வேகமாக சரிந்தது. இதனால், கடந்த 2016ஆம் ஆண்டு அந்த கொள்கையை சீனா இரத்து செய்தது.

தற்போது சீனாவில் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அங்கு குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், குழந்தை பிறப்பு சரிவை கட்டுப்படுத்தி, மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

அந்தவகையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளம் தம்பதிகளை ஊக்குவிக்க, 13 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குழந்தைப்பேறு மானியம், வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, வருமானவரி ஆகிய சலுகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

Share:

Related Articles