NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சும்மா படுத்திருந்தா போதும் – பட்டத்துடன் பரிசு!

வடிவேலு படப் பாணியில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் போட்டி ஒன்று நடைபெற்று வருகிறது. சும்மா படுத்திருந்தால் பரிசு வெல்லலாம் என்பதே இதிலிருக்கும் சுவாரஸ்யம்!

பல நாடுகள் எத்தனையோ விநோதமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதை நாம் கேள்வியும் பட்டிருப்போம். ஆனால் சோம்பேறிக்கான போட்டி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மொண்டெனேகுரோ (Montenegro) என்ற நாட்டில் வடிவேலு படப் பாணியில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் போட்டி நடைபெற்று வருகிறது.

ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு மொண்டெனேகுரோ. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான். பல விநோதமான போட்டிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அங்குப் போட்டித் தொடங்கியிருக்கிறது.

வடிவேலு படப் பாணியில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் போட்டி ஒன்று நடைபெற்று வருகிறது. சும்மா படுத்திருந்தால் பரிசு வெல்லலாம்.

பல நாடுகள் எத்தனையோ விநோதமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதை நாம் கேள்வியும் பட்டிருப்போம். ஆனால் சோம்பேறிக்கான போட்டி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மொண்டெனேகுரோ (Montenegro) என்ற நாட்டில் வடிவேலு படப் பாணியில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் போட்டி நடைபெற்று வருகிறது.

ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு மொண்டெனேகுரோ. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான். பல விநோதமான போட்டிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அங்குப் போட்டித் தொடங்கியிருக்கிறது.

கடந்த மாதம் தொடங்கிய போட்டி, தற்போது 26 நாள்களைக் கடந்திருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்போர் 24 மணிநேரமும் படுக்கையில் படுத்தபடியே இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து உட்காரவோ, நடக்கவோ அனுமதி இல்லை. படுக்கையில் படுத்தபடியே மொபைல், லேப்டாப் போன்றவற்றை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். உணவு, கூல்டிரிங்ஸ் போன்றவை வழங்கப்படும். ஆனால் அவற்றையும் படுத்துக்கொண்டேதான் உட்கொள்ள வேண்டும்.

8 மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று கழிப்பறை செல்ல அனுமதியுண்டு. 21 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 117 மணி நேரம், அதாவது சுமார் 5 நாள்கள் படுத்தபடியே இருந்தவர் பட்டத்தை  வென்றிருக்கிறார். ஆனால் இம்முறை போட்டி 26 நாள்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் கடைசி வரை போட்டியின் விதிமுறையை  மீறாமல் இருந்து வெற்றி பெறுபவர்களுக்கு ‘சோம்பேறி குடிமகன்’ என்ற விருதுடன் 1,000 யூரோக்கள் அதாவது, இந்திய மதிப்பில் 88,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மொண்டெனேகுரோ நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சோம்பேறிகள் என்ற பெயர் உண்டு. அதைக் கிண்டல் செய்யும் விதமாகவே இந்தப் போட்டி முன்னர் தொடங்கப்பட்டது. அதுவே இப்போது சீரியஸாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும், செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share:

Related Articles