NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனநாயக குரல் கட்சியின் வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அ.உ.மீறல் மனு நிராகரிப்பு!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் வேட்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை ஏற்று, கொண்டு, பிரித்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும்; அச்சல வங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம்.மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles