(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான பேச்சுவார்த்தை சற்று முன் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது.
இரு நாட்கள் விஜயம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஹைதராபாத் இல்லத்தில் வைத்து வரவேற்றார்.
இதன்பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில்இ நீண்டகால இந்திய – இலங்கை இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்து மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்.