மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான தகவல் நிலையம் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் நாடு பொருளாதார, சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
புகைத்தல் மற்றும் மதுசார பாவனையினால் தினமும் சுமார் 100 அகால மரணங்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் தடுக்கக்கூடிய 10 மரணங்களில் 8 மரணங்கள் இவ்வகை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன.
தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களுள் இரு
முதன்மையான காரணங்களாக புகைத்தல் பாவனை மற்றும் மதுசார பாவனை காணப்படுகின்றன என மதுசாரம் புகையிலை கட்டுப்பாடு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.