NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் உயர் பதவி!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உயர் பதவி வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்துள்ளது.

குறித்த தொடரானது இந்த மாதம் 10 ஆம் திகதி(ஜூலை 10) ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரானது ஜூலை 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலிரெண்டு டெஸ்ட்டில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles