NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெல்லியில் G20 உச்சி மாநாடு நாளை ஆரம்பம்!

உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளன. 

சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக G-20 நாடுகள் அமைப்பு திகழ்கிறது. அந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உட்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

G-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு G-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று இடம்பெறவுள்ளது.

அதன்படி “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பது டெல்லி G-20 உச்சி மாநாட்டின் முழக்கமாக உள்ளது. டெல்லி G-20 உச்சி மாநாட்டுக்காக மத்திய அரசு மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது.

டெல்லி மாநகரம் சொர்க்க லோகம் போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. G-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்கள் நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக நடைபெற்றன. 

சென்னை உட்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் ஜி-20 நாடுகள் இடையே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த முடிவுகள் கருதப்படுகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles