NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று..! 

தமிழரசு கட்சியின் மத்தியகுழுகூட்டம்இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. 

இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. 

இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், இரா.சாணக்கியன்,  கலையரசன்,, சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி  தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம்,  மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share:

Related Articles