NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலைமன்னார் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தலைமன்னார் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக, நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 இந்திய மீனவர்களையும், மீனவர்களும் அவர்கள் வந்த இரண்டு பல நாள் படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் நேற்று (15) மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் மன்னார் தலைநகர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் மன்னார் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles