NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய்ப்பால் தானம் செய்து கின்னஸ் சாதனை செய்த பெண்!

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. ‘தாய்ப்பால் தெய்வம்’ என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல்இ நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது.

இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும். 2014ஆம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார்.

அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்துள்ளார்.

2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்து வருவதுடன் குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles