(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே எழும்பியதால் அந்த விமானப் பாதையில் இருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தினால் தனது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதாக நீர்கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளர்.
அந்த நபர் தனது சொத்துக்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊடங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
விமானம் தாழ்வாக பறக்கும் போது வீசிய பலத்த காற்றினால் தனது வீடு மட்டுமின்றி தனது அன்றாடச் செலவுக்கு உதவியாக இருக்கும் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளிட்ட தோட்டங்களும் நாசமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (13) 5.30க்கும் 5.50க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாம் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டதாக குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான ருடு-303 எனவும் குறிப்பிட்டுள்ளார்.