அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது முதல் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அயல்நாடுகளுக்கும் நெருக்கடி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்த உள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தென் ஆப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது.
எனவே இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது என்றும், அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







