NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய விலங்கியல் துறையின் 87ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜூலை 03ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சகல சிறுவர்களுக்கும் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

அந்நாளில், விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது குறித்த மனப்பான்மையை மக்களிடையே வளர்க்கும் திட்டங்களும், குழந்தைகள் அறிவைப் பெறுவதற்கான பல வேடிக்கையான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

Share:

Related Articles