NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை..!

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று கடிதம் ஒன்றை கையளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் வழங்கிய உர மானியத்தை மக்களுக்கு வழங்கியமைக்காக தற்போதைய ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  25,000 ரூபாய் மானியம் போதாது, விவசாயிக்கு முப்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 

முன்னாள் ஜனாதிபதியும் 30000 ரூபாவை வழங்க தீர்மானித்திருந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இந்த உர மானியம் வழங்குவதை இடை நிறுத்தியமையால் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது.

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், யார் தோற்றாலும் பரவாயில்லை, விவசாயியை அனாயாசமாக்காமல் உரம் வழங்குவதற்கு முந்தைய எதிர்க்கட்சிகள் போல் அரசு செய்த நல்ல பணிகளுக்கு உதவுவோம், என்றும் இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளமாட்டோம். 

அத்துடன் நாட்டிற்கு புரதச்சத்து வழங்கும் மீனவர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாங்கள் இருந்தபோது பந்தி உரத்தை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தோம், தேர்தலுக்கு முன்பாக உரம் இருப்பு வைக்கப்பட வேண்டும். 

காய்கறிகள் மற்றும் இதர பயிர்களுக்கு பந்தி உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு, தேவையான போக்குவரத்து கட்டணம் மற்றும் பேக்கேஜிங் நிதிகளும் உரிய அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles