காசா போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கி வருகிறது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த மோதலில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் இணைந்து கொண்டது.
கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது சுமார் 180 பொலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில் பெரும்பாலான ஏவுகணைகளை தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதேசமயம், தங்கள் ஏவுகணைகள் சரியான இலக்கை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.