NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் சிறுமியொருவர் உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வாழைச்சேனை – மீராவோடை பகுதியில் நேற்றிரவு (11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறிய போது மேசையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி சிறுமி மீது விழுந்துள்ளது.

திடீரென்று மயக்கமடைந்த சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles