நட்சத்திர உதைபந்து வீரர்களில் ஒருவரான உருகுவேவைச் சேர்ந்த 37 வயதான லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம், 17 ஆண்டுகள் நீடித்த அவரது மாபெரும் சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
இவர் உருகுவே அணி சார்பில் விளையாடும் கடைசி போட்டியாக, இன்று பாரகுவேயுடன் நடைபெறவுள்ள பிஃபா (FIFA) உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லூயிஸ், 142 சர்வதேச போட்டிகளில் விளையாடி 69 கோல்கள் அடித்து, உருகுவே நாட்டின் எல்லாக் காலங்களிலும் சிறந்த வீரராக திகழ்ந்தார்.
2007ஆம் ஆண்டு கொலம்பியாவுக்கெதிரான போட்டியில் முதலாவதாக கலந்து கொண்டார். தற்போது, அவர் தனது விளையாட்டு வாழ்க்கையை இன்டர் மயாமி FC இல் தொடர்ந்து, கிளப் அளவிலான விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.