NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டப்பாட்டு நிலை உருவாகியுள்ளது.

மருத்துவ விநியோகப் பிரிவில் இந்த வகை மருந்துகள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. 

சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது மருந்துப் பொருள் தட்டுப்பாடு தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles