NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் பல வருடங்களுக்குப் பிறகு சிக்கின்குனியா நோய்…!

நாட்டில் பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்கின்குனியா நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்கின்குனியா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நோய் தற்போது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களிலும் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள தீவுகளிலும் பரவும் ஒரு நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் மழை பெய்யும் போது நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவே மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருந்து நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Related Articles