NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிலவில் 4G வலையமைப்பை நிறுவும் முயற்சியில் NOKIA

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் 4G வலையமைப்பு சேவையை நிறுவ நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான பணிகளையும் நோக்கியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 1972ஆம் ஆண்டு முதன் முதலாக மனிதன் நிலவில் கால் பதித்தான் அதன் பிறகு சுமார் 50 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போது ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை நாசா முன்னெடுத்துள்ளது. நிலவில் 4G வலையமைப்பு சேவையை நிறுவ நோக்கியா தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நிலவின் மேற்பரப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், விண்வெளி வீரர்களுக்குத் தகவல் தொடர்பில் உதவும் வகையிலும் நோக்கியா ஸ்மார்ட்போன் பிராண்ட் 2023இன் பிற்பகுதியில் நிலவில் வலையமைப்பை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

SpaceX ரொக்கெட்டின் உதவியுடன் இந்த வலையமைப்பை நிறுவ நோக்கியா திட்டமிட்டுள்ளது. இது நோவா-சி லூனார் லேண்டரில் சேமிக்கப்படும் ஆண்டெனா பொருத்தப்பட்ட அடிப்படை நிலையத்தால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனுடன் சூரிய சக்தியில் இயங்கும் ரோவர் ஒன்றும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles