NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீரில் மூழ்கி 16 வயது மாணவன் பலி…!

தம்புள்ளை – இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காலி – ஹல்வித்திகல பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே  இவ்வாறு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின்போதே மேற்படி மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தனது பாட்டி மற்றும் சகோதரருடன் அநுராதபுரத்துக்கு நேற்று முன்தினம் (23) புனித யாத்திரை மேற்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இந்நிலையில், மாணவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று (24) நடைபெற்ற பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:

Related Articles