(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்துரைத்த அவர், கடந்த மூன்று மாதங்களாக இதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.