NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தல்!

நைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின் போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தப்பட்டனர்.

நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பொலிஸார் கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles