(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நோர்வூட் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்கள் இன்று (19) பிரதேச செயலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நோர்வூட் மாவட்ட செயலகத்தினால் தாம் விரும்பிய வங்கியில் வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக வழங்கப்பட்ட உத்தரவாதப் பயனாளிக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குறித்த கடிதத்தை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் இருந்த சிலர் பிரதேச செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பயனாளிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்த நோர்வூட் பிரதேச செயலக வளாகத்திற்கு நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.