NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பண்டாரகம பிரதேசத்தில் நீரில் மூழ்கி மாணவர் பலி!

பண்டாரகம – மஹபெல்லன ஆற்றில் மூழ்கி 16 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற குறித்த மாணவர் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

அலுபோமுல்ல பிரதேச பாடசாலையில் பதினோறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் தனது பாடசாலையைச் சேர்ந்த மேலும் நான்கு நண்பர்களுடன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மஹபெல்லன ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் காணாமல்போயிருந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் படகு மூலம் மாணவனை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நீரில் மூழ்கிய மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் வைத்தியர்கள் மாணவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்தும் பலனளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Related Articles