NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!

தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதுமான பஸ்பேருந்து சேவைகள் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, புகையிரத திணைக்களம் 4 விசேட புகையிரதங்களை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் புகையிரதங்கள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக புகையிரததிணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு புகையிரதம் புறப்படும் என்றும் மற்றைய புகையிரதம் பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு – கோட்டை நோக்கி புறப்படும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles