இந்தியாவின் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். இதில் தோல்வி அடைந்த தமிழிசை சௌந்தரராஜன், அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்தது.
தற்போது பாராளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது அளுநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தமிழிசை சௌந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.