தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவல் காரணமாக இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காற்று வீச்சு காரணமாக திடீரென வனப்பகுதி முழுவதும் காட்டுத்தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளில் காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை சுற்றி இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.