NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பழைய மொடல் iPhone பல கோடிகளுக்கு ஏலத்தில் விற்பனை !

அப்பிள் ஐ-போன்களின் விலை ஏனைய கையடக்கத் தொலைபேசிகளின் விலையை விடவும் அதிகம் என கேள்விபட்டிருப்போம்.

அதே நேரம் பழைய மொடல் ஐ-போன் ஒன்று இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டிற்கான கோடை கால பிரீமியர் ஏலத்தை எல்.சி.ஜி. நிறுவனம் நடத்தியுள்ளது.

இதில் 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய அப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

ஆரம்ப விலையாக 10,000 அமெரிக்க டொலர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் முடிவில் அந்த ஐ-போன் ஒரு லட்சத்து 90,322 அமெரிக்க டொலருக்கு விற்பனையானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொலைபேசியின் சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles