2024 ஜனவரி மாத கடைசி வாரத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 ஆம் திகதியன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளது.