NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பஹா – கந்தானை பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி, அவரின் வீட்டிலேயே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும், சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அசாதாரண சூழ்நிலைகளின் போது உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர கீழே தரப்பட்டுள்ள முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்வன் மூலம் அதில் இருந்து மீண்டுவரக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

01. Sri Lanka Sumithrayo

0707 308 308

0767 520 620

info.slsumithrayo@gmail.com

02. 1926 – National Mental Health Helpline

Share:

Related Articles