NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பார்வையற்றவர்களுக்கு ஒரு புது உலகம்!

மனிதர்களுக்கு துணையாக இருக்க உதவும் தொழில்நுட்பத்தினை அசிஸ்டிவ் டெக்னாலஜி என்பார்கள்.

GPT 4 , AI Cloud, Google Glass உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு ஒரு புது உலகத்தையே கொடுக்க முனைந்திருக்கிறார்கள்.

கூகுள் கிளாசை ஒரு பார்வையற்றவர் அணிந்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் காமிரா உதவியுடன் அவரின் சுற்றுப்புறத்தை படம் பிடிக்கும். அந்த காட்சிகள் புகைப்படங்களாக முதலில் மாற்றப்படும். Gpt4 உதவியுடன் புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்பம் உள்ளது. எடுத்த புகைப்படங்கள் இணையத்தின் வழியாக AI Cloud சர்வருக்கு அனுப்பப்படும். அந்த புகைப்படங்களை தொழில்நுட்பம் வார்த்தைகளாக மாற்றும். அந்த வார்த்தைகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் கூகுள் கிளாஸ் இருக்கு அனுப்பப்படும். கூகுள் கிளாஸ் இப்போது அந்த வார்த்தைகளை பேச்சாக மாற்றி பார்வையற்றவருக்கு தகவலை தெரிவிக்கும். கூகுள் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் செவி வழி கருவியில் அந்த பேச்சுக்கள் கேட்கும்.

மேலும் ஒரு மனிதரை அடையாளம் காணவும், தன் சுற்றுப்புறத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும். உங்கள் நண்பர் வரும் பட்சத்தில் அவர் படத்தின் உதவியுடன் கூகுள் கிளாஸ் இன்னார் என்பதை தெரிவிக்கும். உங்கள் சுற்றுப்புறத்தை விளக்கக் கூறினால் எதிரில் இருப்பவற்றை படங்களாக பிடித்து அதைப் பற்றி விளக்கும்.

உண்மையாகவே பார்வையற்றவர்களின் வாழ்க்கை மிக மிக எளிதாகும். பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி இனி புத்தகங்களை படிக்கலாம், எழுதலாம், சமைக்கலாம், தங்கள் வாழ்க்கையை சக மனிதரைப் போன்று வாழலாம்.

இனி வரும் காலத்தில் Virtual Reality Headset உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை செய்யும் போது மகிழ்ச்சி பொங்குகிறது நிச்சயம் அவர்களின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் சிறப்பாக இருக்கும்.

Share:

Related Articles