(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிலிப்பைன்சில் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்சின் குடிவரவு பணியகத்தினால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்சில் தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளை மீறியமைக்காகவும் விரும்பத்தாகதமைக்காகவும் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிராந்திய நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து குடிவரவு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.
பிலிப்பைன்சில் உள்ள நிறுவனமொன்றில் இலங்கை நபர் முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியுள்ள அதிகாரிகள் அவருக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.