NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய நீர் கட்டண சூத்திரம் விரைவில் அறிமுகமாகும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீரை வழங்கும் நோக்கில் புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று (18) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ‘ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி’ என்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முதலீட்டுச் செலவு அதிகரிப்பின் காரணமாக தற்போதுள்ள நீர்க் கட்டணங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஆனால் இதன் தாக்கம் சமுர்த்தி உள்ளிட்ட சமூக நலப் பயனாளிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles