NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளிர் பிரீமியர் லீக் – மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 23ஆம் திகதி தொடங்கி நடந்து வருகிறது.

பெங்களூருவில் நேற்று நடந்த 3ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பெறும் 2ஆவது வெற்றி இதுவாகும்.

4 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Share:

Related Articles