NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்கப் போவதாக இரவில் தொலைபேசி அழைப்பு – கட்டடத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு..!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக வியாழக்கிழமை (24) இரவு  வந்த தொலை பேசியையடுத்து  அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற கட்டட தொகுதியை குண்டுவைத்து தகர்க்க போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சம்பவ தினமான இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டித்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன்  இந்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸஹரான் காசிமின் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான  சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று காலை தொடக்கம் விசேட அதிரடி படையினரின்  வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் கட்டடத் தொகுதி களஞ்சிய பகுதி என்பன முற்றாக பரிசோதிக்கப்பட்டன. இதில் எவ்விதமான ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்று காலை தொடக்கம் நீதிமன்ற வளாகம் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்றைய நீதிமன்ற வழக்குகளுக்கு வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் விசேட மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற வளாகம் முற்றாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நீதிமன்றத்தில் கடமையாற்றும் ஊழியர்களும் உள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சகல பரிசோதனைகளும் நிறைவடைந்த பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் 11 மணிக்கு பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிசார் ஆயத்தங்களை மேற்கொண்டனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles